Daily Thanthi
மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினேன் - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). இவர் தனது மாமா ரமேசுடன் சேர்ந்து வீடுகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். பிரசாந்தின் தாய் எழில்செல்வி சென்னையில் உள்ள ஒரு நடிகை வீட்டில், வீட்டு வேலை செய்து வருகிறார். வேலை இல்லாத நாட்களில் பிரசாந்த் சென்னையில் வசிக்கும் தாயை பார்க்க வருவது வழக்கம். மேலும், சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தின் நண்பர் களான தேவராசு (19), தினேஷ்…