Maalaimalar
மகரம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை
மகரம் ஆரவாரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோக நிலையில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடைபெறும். தம்பதிகளிடம் நெருக்கம் கூடும். காதல் துளிர்க்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் விரைவில்…