Nakkheeran
கைதிகள் தப்பியோட்டம்; சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
சென்னை புழல், தேனி சிறையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக சிறைத்துறை சார்பாக பல்வேறு நிர்வாக மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சிறைத்துறை மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதே சமயம், அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த கே. சங்கர் சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பல்வேறு சிறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும்…