Indian Express Tamil
ரூ.24 கோடி பறிமுதல் வழக்கு: சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடி விடுதலை: ஐகோர்ட் உத்தரவு
எழுதியவர்: ரிச்சா சஹாய் "ஒரு நிமிட சட்டவிரோதக் காவலைக் கூட சகித்துக் கொள்ள முடியாது" என்று குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவமனை பங்குதாரரின் பங்குகளை வாங்குவதற்கான ரூ.24 கோடி ஒப்பந்தம் தொடர்பான மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையால் (சி.பி.சி.ஐ.டி) கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாக, எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: மருத்துவமனை பங்குதாரர்களில் ஒருவர், தான் இந்த ஒப்பந்தத்திற்கு நிர்பந்திக்கப்பட்டதாகவும், அதன் கீழ் ரூ.5 கோடியைச் செலுத்திவிட்டு, எஞ்சிய ரூ.19 கோடியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகவும் புகா…