உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புதுச்சேரி விடுதலை தினம் - கடற்கரை சாலையில் கொண்டாட்டம்..!

புதுச்சேரியின் விடுதலை தினத்தையொட்டி, கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படைப் பிரிவுகள், என்.சி.சி. மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பும், பல்வேறு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சிவக்கொழுந்து, எம்.பி. செல்வகணபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.