Polimer News
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்து 70 ஆண்டுகள் நிறைவு..!
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த வரலாற்று மாற்றத்திற்காக குமரித் தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் நடைபெற்ற தெற்கெல்லைப் போராட்டமும், தியாகிகளின் பங்களிப்பும் நினைவு கூரப்படுவதோடு, அவரது சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.