Indian Express Tamil
கோவை சி.ஐ.டி. கல்லூரியில் 'கிரேன்' ஏ.ஐ. மையம் தொடக்கம்: 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
"எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மாணவர்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை தீவிரமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்" என டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரி சுகன்யா வலியுறுத்தியுள்ளார். கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (CIT), பொறியியல் கல்வியுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இணைக்கும் வகையில் 'கிரேன்' (CRANE) என்ற புதிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரியும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவியுமான சுகன்யா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பேசிய சுகன்யா, ”இன்றைய கால கட்டத்தில் அனைத்து தொழில்துற…