Indian Express Tamil
ஃபிரிட்ஜை எவ்வளவுதான் துடைத்தாலும் சுத்தமாகலையா? ஒரு கப் வினிகர் போதும்... இப்படி பண்ணி பாருங்க
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஃபிரிட்ஜ் மிகவும் அவசியமான வீட்டு உபயோகப் பொருளாக மாறிவிட்டது. காய்கறிகள், பழங்கள், பால், தயிர், சமைத்த உணவுகள் எனப் பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்கிறோம். ஆனால், ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை அடுக்குவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு அதன் உட்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, ஃபிரிட்ஜில் உள்ள கண்ணாடித் தட்டுகள், காய்கறிப் பெட்டிகள் மற்றும் அவற்றின் ஓரங்களில் உணவுத் துகள்கள், காய்கறிச் சாறுகள், எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை படிந்து விடுகின்றன. இவற்றை அவ்வப்போத…