Indian Express Tamil
TNPSC Group 2 Exam Analysis: குரூப் 2 தேர்வில் கணிதம் ஈஸி; பொது அறிவு கேள்விகள் எப்படி இருந்தன?
தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 1) நடைபெற்ற குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணித வினாக்கள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 846 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 43 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 803 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு 4.98 லட்சம் விண்ணப்பித்தனர். இந்த குரூப் 2 பதவி…