உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உப்பு ஜாடிக்குள் இதை மட்டும் போட்டு வைங்க... மழைக்காலத்திலும் மிளகாய்த்தூள், மசாலா கட்டியாகாது

மழைக்காலம் விவசாயத்திற்கும், இயற்கைக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் வீட்டுப் பராமரிப்பில் சில சவால்களையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்தப் பருவத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சமையலறையில் வைத்திருக்கும் மளிகைப் பொருட்கள் விரைவாகக் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அரிசி, பருப்பு, மாவு வகைகள் மட்டுமின்றி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் உள்ளிட்ட அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவற்றில் கட்டிகள் உருவாவதுடன், பூஞ்சையும் ஏற்படலாம். இதனால் உணவின் சுவை மாறுவதோடு, அவற்றைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றதாக மாறக…