உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

இந்தியாவின் புதிய வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டம் வெற்றி - இஸ்ரோ தலைவர்

இந்தியாவின் புதிய வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்றார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் ஏவப்படும் எனவும் தெரிவித்தார்.