Indian Express Tamil
சமையல் முடிந்ததும் குக்கரை கழுவி வைக்கிறீங்களா? அப்போ இந்த முக்கியமான விஷயத்தையும் கவனிங்க
வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பலருக்கும் சமையலறையில் மிகவும் உதவியாக இருப்பது பிரஷர் குக்கர். குறைந்த நேரத்தில் சாதம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளைச் சமைக்க முடிவதால் பெரும்பாலான வீடுகளில் குக்கரின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், சமையல் வேலையையும் எளிதாக்கும் இந்தக் குக்கரைப் பயன்படுத்துவதில் சில முக்கியமான பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, குக்கர் மூடியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய உலோகப் பாகமான பாதுகாப்பு வால்வின் (Safety Valve) முக்கியத்துவத்தைப் பலரும் அறிந்திருப்பதில்லை. பார்ப்பதற்குச்…