Indian Express Tamil
ராஜ்மோகனுக்கு ரூ 5 கோடி லஞ்சம் கொடுக்க வந்த நபரை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்: அ.தி.மு.க ஜெயக்குமார்
தனக்கு ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், லஞ்சம் கொடுக்க முன்வந்தவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ. 5 கோடி தருகிறேன் என ஒருத்தர் பேசினார். இது லயோலா மணிக்கும் தெரியும். ஆனால் 500 கோடி கொடுத்தாலும், பொருத்தமில்லாத ஒருவருக்கு முதல்வர் விஜய் எந்த பதவியையும் தரமாட்டார். பொருத்தமுள்ள பு…