Indian Express Tamil
வீட்டுல இருந்தே சிங்கிள் கிளிக்ல புர்ஜ் கலிஃபா டிக்கெட் புக் பண்ணலாம்; வெளிநாட்டில் கலக்கும் இந்தியர்கள்
இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களின் நுழைவு கட்டணங்களை தங்களது யு.பி.ஐ (UPI) செயலிகள் மூலமாகவே எளிதாக செலுத்தலாம். புர்ஜ் கலீஃபா மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற இடங்களுக்கு செல்ல சர்வதேச பணப்பரிவர்த்தனை கார்டுகளை நம்பியிருக்காமல், நேரடியாக யு.பி.ஐ மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) சர்வதேசப் பிரிவான என்.ஐ.பி.எல் (NIPL), இந்த வசதியை சாத்தியப்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் டைம் கனடா போறீங்களா? இந்த 5 த…