Nakkheeran
பணியின் போது ஊர்க்காவல் படை வீரருக்கு நேர்ந்த சோகம் : முதல்வர் விஜய் இரங்கல்!
அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர்ராஜகண்ணன் (வயது 32) மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சி. வெங்கடேசன் (வயது 48) ஆகியோர் கடந்த 29.10. 2026 இரவு, காவல் பிட் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலுப்பனூர் லாரிஷெட் அருகே மது போதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூவரை விசாரித்து எச்சரிக்கை செய்…