Indian Express Tamil
அ.தி.மு.க-வில் இணைந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை: சசிகலா கட்சியில் இருந்து விலகல்
தமிழ்நாடு காவல்துறையில் அயோத்திகுப்பம் வீரமணி, சந்தனக் கடத்தல் வீரப்பன் உள்ளிட்ட அதிரடி என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் பணியாற்றிப் பிரபலமான ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டுப் பின்னடைவைச் சந்தித்த வெள்ளத்துரையின் இந்த அதிமுக வருகை, தென் மாவட்ட அரசியல் கள…