Daily Thanthi
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வியாபாரம் பாதிப்பு
கூடலூர், நீலகிரியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மற்றும் கோத்தகிரி வழியாக செல்லும் சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது…