உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அலைச்சல் இனி இல்ல; வாட்ஸ்அப் பண்ணுனா மட்டும் போதும்: பி.எஃப் பேலன்ஸ், பாஸ்புக் பார்க்க புதிய வசதி

எழுதியவர்: ஆஞ்சல் இதழ் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பயனர்களுக்கு வாட்ஸ்அப் சேவை உள்ளிட்ட பயனர் நட்பு நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். இந்த சரிபார்க்கப்பட்ட வாட்ஸ் அப் தளத்தின் மூலம் பயனர்கள் தங்களது பி.எஃப் (PF) இருப்புத் தொகை மற்றும் பிற விவரங்களை அறிய முடியும். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க 34 கோடிக்கும் அதிகமான மொத்த உறுப்பினர்களையும், 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும் கொண்ட இந்த ஓய்வூதிய நிதி அமைப்பு, ரூ.1,000 வரையிலான இருப்புத் தொகையைக் கொண்ட செயல்பாடற்ற இ.பி.எஃப் (EPF) கணக்குகளை தான…