IBC Tamil
தும்பறை சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி
பல்லேகல - தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இன்று (1) பிற்பகல் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்பு சாவடிக்கு (Watchtower) ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட காயங்களால் மரணம...