Nakkheeran
இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். முக்கிய அறிவுறுத்தல்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று (01.11.2026) நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் எப்போது நடைபெற்றாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் த…