Nakkheeran
பள்ளிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மற்றொருபுறம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து முரசு புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகஇந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயல், கடந்த 6 மணி நேரத்த…