உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சிறையிலிருந்து தப்பிச் சென்றது ஏன்?” - கைதியின் வீடியோ!

தேனி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மீனாட்சி சுந்தரம், சரணடைவதற்கு முன்னதாக ஒரு காணொளியை வெளியிட்டார். அந்த வீடியோவில் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், “நான்தான் ஜெயிலில் இருந்து, தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பித்துச் சென்ற மீனாட்சி சுந்தரம். நீதிபதி ஐயாவுக்கும், முதலமைச்சர் ஐயாவுக்கும் ஒரு வேண்டுகோளாகத்தான் இதைச் சொல்கிறேன். நாங்கள் எல்லாரும் சேர்ந்து வந்தது எந்தப் பிரச்சினையும் செய்வதற்காக அல்ல. வந்த 21 பேரிடமும் நீங்கள் கேட்டுப் பாருங்கள். எல்லாருமே சேர்ந்து முடிவெடுத்துத்தான் வந்தோம். நாங்கள் வெளியே வந்து நீதிபதியிடம் இதையெல்லாம் சொல்லிவிட்டு, நீதிமன்றத்தில் சரணடைவதற்காகத்தான் வந்தோம். அந்த…