Dinamani, Sports
டோரே பான்பசிபிக் ஓபன்: டயானா ஷ்னெய்டா் சாம்பியன்!
ஜப்பானில் நடைபெற்ற டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஷ்னெய்டா் 6-4, 5-7, 6-2 என்ற செட்களில், கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸை வீழ்த்தி, வாகை சூடினாா். நடப்பு சீசனில் ஷ்னெய்டருக்கு இது முதல் பட்டமாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது 6-ஆவது கேரியா் பட்டமாகும். 2 மணிநேரம், 18 நிமிஷங்கள்…