Nakkheeran
முதல்வர் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்; திமுகவினர் திரள்வதாகச் சொன்னதால் மாற்றமா?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று (02-11-26) புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவிற்கு வருகை தருகிறார். திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவருக்கு விராலிமலைத் தொகுதியில் மாத்தூர், மண்டையூர் மற்றும் கீரனூர், கட்டியாவயல் ஆகிய பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்ட உள்ளது. முதல் நிகழ்ச்சியாக புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை திறந்து வைத்து அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 2000 பேர் அமரும் அளவில் தயார் செய்யப்பட்டுள்ள கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் வந்து செல்லும் வரை பாத…