Samayam Tamil
அரசு பணத்தில் கட்சி பிரச்சாரம் செய்யும் முதல்வர் விஜய்: விராலிமலை, பெருந்துறை, அம்பை பயணத்தால் எழுந்த சர்ச்சை
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தல் நடக்கும் இடங்களாகப் பார்த்து, அங்கே அரசு விழா என ஒரு விழா நடத்தி, அதை காரணம் காட்டி ரோடு ஷோ மூலம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாக அரசு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.