Daily Thanthi
‘பிரிட்ஜ்' வெடித்து வீடு தீப்பிடித்ததில் பெண் உடல் கருகி உயிரிழப்பு - கணவர், மகன் படுகாயம்
சென்னை, சென்னை கொரட்டூரில் 'பிரிட்ஜ்' வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பலியானார். கணவர், மகன் படுகாயம் அடைந்தனர். சென்னை கொரட்டூர் பெரியார் நகர், விவேகானந்தா பள்ளி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ரமணி (55 வயது). இவரது மனைவி அகிலா (48 வயது). இவர்களுடைய மகன் கார்த்திக் (23 வயது). ரமணி சொந்தமாக இரும்பு தொழில் செய்து வருகிறார். அகிலா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு…