Indian Express Tamil
வாரம் முழுக்க டயட்... ஒரே ஒரு நாள் 'சீட் டே'; உங்க உழைப்பை வீணாக்குறது இதுதானா?
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் தினமும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். நடைப்பயிற்சி, ஓட்டம், எடை தூக்கும் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் சிலருக்கு உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. சிலருக்கு எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவும் செய்கிறது. இதனால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் ஏற்படலாம். உண்மையில், உடல் எடையைக் குறைப்பதற்கு ஜிம்மில் பல மணி நேரம் செலவிடுவது மட்டுமே போதுமானதல்ல. நாம் பின்பற்றும் உணவுமுறை, தூக்கப் பழக்கம், அன்றா…