உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, சமூக நீதித்துறை ஆசிரியர்களுக்கு ஒரு நீதியா?’ - கணினி ஆசிரியர்கள் வேதனை

பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களை ஒரு மாதிரியாகவும், சமூக நீதித்துறை ஆசிரியர்களை வேறு மாதிரியாக நடத்தப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதித்துறை பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களின் நிலை 2 பணியிடங்களை, நிலை 1 ஆக தரம் உயர்த்த வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் 1853 கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 2 பணியிடங்கள், நிலை 1 ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், சமூகநீதிதுறை பள்ளிகளில் 58, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10 என மொத்த…