Nakkheeran
16 நாட்களாக நீடிக்கும் மர்மம்: மாயமான செஞ்சி சிறுமியை மீட்டெடுக்க சிபிசிஐடி கையில் எடுத்த ‘பிளான் சி’
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தில், தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாளே அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போன ஏழு வயது சிறுமி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 100-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் மோப்ப நாய்கள், தெர்மல் ட்ரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 10 நாட்களாகக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தீவிரமாகத் தேடியும், 600-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தும் எந்தவொரு துப்பும் கிடைக்காததால், தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் இந்த வழக்கு உடனடியா…