Hindu Tamil Thisai
குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: அதிக எண்ணிக்கையில் அரசியல் கேள்விகள்!
எவ்வித பரபரப்பும் இன்றி, வெகு அமைதியாக, நேர்த்தியாக குரூப்-2 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. வினாத்தாளில் அச்சுப்பிழை, எழுத்துப்பிழை, கருத்துப் பிழை அநேகமாக அறவே இல்லை. இதற்காக ஆணையம் தனி கவனம் செலுத்தி செயல்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. பாராட்டுகள். பொது அறிவுப் பிரிவு, பொதுத் தமிழ்ப் பிரிவு என்று இரண்டிலும் வினாக்கள் எளிதாகவே இருந்…