Puthiya Thalaimurai
ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 15 | நல்லவற்றிற்குக் காலம் இருக்கிறதா?
உயிரும் அரைநாளும் இரண்டு வாரங்களுக்கு முன் நண்பரான மருத்துவர், அவர் இருக்கும் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்து, அதன் மூலம் தன் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவு ஓர் அறுவைச்சிகிச்சை முடிந்து நோயாளியைத் தொடர் கவனிப்பில் ( OBSERVATION) வைத்திருந்து இரவு வீட்டிற்கு வந்ததே நடுநிசி 2 மணியாகிவிட்டதாம். பொதுவாக இரவு மிகவும் தாமதமாகப் படுத்தால் கூடுதலாகக் கொஞ்சம் தூங்கிவிட ஆசைப்படுவது மனித இயல்பு தானே…