Indian Express Tamil
புதுத் துணி துவைக்கும்போது உஷார்; மற்ற ஆடைகளின் நிறமே மாறாமல் இருக்க இதைச் செய்யுங்க
துணிகளைத் துவைப்பது என்பது அன்றாட வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தாலும், சில நேரங்களில் அது பெரிய தலைவலியாக மாறிவிடும். குறிப்பாக, வெள்ளை நிற ஆடைகளுடன் வண்ணத் துணிகளைச் சேர்த்துத் துவைக்கும்போது, ஒரு துணியின் சாயம் மற்றொரு துணியில் ஒட்டிக்கொள்வது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். புதிதாக வாங்கிய அடர்ந்த நிற ஆடைகள், சிவப்பு, நீலம், கருப்பு, பச்சை போன்ற நிறத் துணிகள் துவைக்கும்போது அதிகப்படியான சாயத்தை வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளை நிறச் சட்டை, சுடிதார், வேட்டி, துண்டு போன்ற ஆடைகளில் வேறொரு நிறம் படிந்து அவற்றின் தோற்றமே மாறிவிடும். சில நேரங்களில் விலை உயர்ந்த ஆடைகள்கூட இதனால…