Hindu Tamil Thisai
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல்
சென்னை: அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மரபணு மாற்றம் காரணமாக குழந்தைகளுக்கு முதுகுத் தண்டுவட தசைச் சிதைவு என்ற தீவிரமான மரபணு நோய் ஏற்படுகிறது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தசைகள் மற்றும் நரம்புகள் படிப்படியாக வலுவிழக்கும். இதை குணப்படுத்தும் மருந்து அமெரிக்காவில் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.16 கோடி எனவும்…