உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு?”; தர்ணா போராட்டத்தில் இறங்கிய முன்னாள் முதல்வர்

உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டதாக எழுந்த தகராறில் ஆளும் கட்சியினருக்கும் , எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி, பல இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி கட்சியினருக்கும், எதிர்க் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் கல் வீச்சு சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்நிலையில், அனந்தபுரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், சிலர் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒய்எஸ…