Nakkheeran
'நாடகத்தை அரங்கேற்றி விட்டு கைதிகள் ஓட்டம்'-அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் விளக்கம்
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''சிறையின் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 விசா…