Indian Express Tamil
வங்கிகளை விட பெஸ்ட்: போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டத்தில மாசம் 5,000 போட்டா இத்தனை லட்சம் ரிட்டர்ன்ஸா?
வங்கிகளைப் போலவே இந்திய அஞ்சல் துறையும் பல அசத்தலான நிதிச் சேவைகளைக் கொடுத்துட்டு வருது. அதுல மக்கள்கிட்ட ரொம்பவே பிரபலமானதுதான் இந்த ஆர்.டி (RD) திட்டம். குறிப்பா, பெரிய தொகையா ஒரேடியா கட்ட முடியலைன்னு கவலைப்படுறவங்களுக்காகவே இது செம சாய்ஸ். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்துக்கு 6.7% வட்டி தராங்க. இந்தத் திட்டத்தோட மொத்தக் கால அளவு 5 ஆண்டுகள் (அதாவது 60 மாதங்கள்). இதுல 'லாக்-இன்' காலம் இருக்கு, அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடி பணத்தை எடுக்க முடியாது. இந்தத் திட்டத்துல சேருறது ரொம்ப ரொம்ப ஈஸி. மாசத்துக்குக் குறைந்தபட்சம் ரூ. 100 இருந்தாலே போதும், உங்களோட கணக்கைத் தொடங்கிடலாம். அதிகபட்…