Daily Thanthi
டெல்லி: போலி நாணயங்கள் தயாரித்து விநியோகம் செய்த 4 பேர் கைது
புதுடெல்லி, டெல்லியில் போலி 20 ரூபாய் நாணயங்களைத் தயாரித்து, சட்டவிரோதமாக சந்தையில் விநியோகம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். வாகன சோதனை டெல்லி முண்ட்கா தொழிற்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அன்று, காவல்துறை குற்றப்பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். காரில்…