Polimer News
டாஸ்மாக்கை திறக்காமல் போராட்டம் - 160 ஊழியர்கள் சஸ்பெண்ட் எனத் தகவல்
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 960 ஊழியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 160 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று கடைகளைத் திறக்காத ஊழியர்களுக்கும் மீண்டும் மெமோ வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.