Polimer News
டாஸ்மாக் தனியார் மயமாகுமா? அமைச்சர் விளக்கம்.. இனி பார்களில் இரவு 10 மணிக்கு மேல்.. - புதிய கட்டுப்பாடுகள்
டாஸ்மாக்கை தனியார் மயமாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் தனியார் மயமாகாது எனத் தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, டாஸ்மாக் பார்களில் மது அருந்துவது தொடர்பாகப் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணிக்குப் பிறகு டாஸ்மாக் பார்களில் யாரும் மது அருந்தக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 21 வயது பூர்த்தியாகாதவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்றும், அவர்களைப் பாருக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், 21…