Nakkheeran
”தோசை சுடும் வேட்பாளர்”; அமெரிக்கத் தேர்தலில் இந்தியக் கலாச்சாரம்
தேர்தலை முன்னிட்டு இந்தியர்களின் வாக்குகளைக் கவர வேட்பாளர்கள் தோசை சுடுவது, கோயில்களுக்குச் செல்வது போன்ற நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில், வருகின்ற நவம்பர் 3 அன்று இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் 435 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு (35) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குமான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, கிட்டதட்ட 26 லட்சம் இந்திய வம்சாவளியினர் இந்த தேர்தலில்…