IBC Tamil
அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் இரண்டு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்:ஈரான்
அமெரிக்கா தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களில் மீண்டும் திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இன்று (2) தெரிவித்துள்ளது. முன்னதாக, இத்திட்டம் ஒரு வார காலக்கெடுவாக முன்மொழியப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். "இந்தத் திட்டத்தை இரண்டு நாட்களில் செயல்படுத்தும் சாத்தியம், ஈரானின் நல்லெண்ண அணுகுமுறைக்கு மற்றொரு சான்றாகும...