IBC Tamil
நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு க்ரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நாளை (28) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்காக அவர் நாளை (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.