IBC Tamil
நம்பவைத்து ஏமாற்றிய மகாவலி அதிகார சபை : பொங்கியெழுந்த பண்ணையாளர்கள்
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களான எங்களை நம்பவைத்து ஏமாற்றியது மகாவலி அதிகார சபையே என்று போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (02) மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, குளம் அமைத்து தந்தமை, வீதி அமைத்து தந்தமை, புற் தரை தந்தமை, மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு இடம் தந...