உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விஜய்யின் புதுக்கோட்டை விஜயம்: அமைச்சர் பர்வேசுக்கு கிடைத்த முக்கியத்துவம்; மனு கொடுத்த பெண்ணின் கண்ணீரை கையால் துடைத்துவிட்ட விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய், அரசுப் பணிகள் மற்றும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்துத் தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மேற்கொண்ட பயணம், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அமைச்சர் பர்வேஸ் உடனான நெருக்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரங்கள் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மாவட்டத்தின் முக்கியப் புள்ளியும் அமைச்சருமான பர்வே…