Nakkheeran
பால் விலை உயர்வா? : “உண்மை என்ன?” - ஆவின் நிர்வாகம் விளக்கம்!
ஆவின் பால் விலை உயர்வு குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை. எனவே பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம். மக்களின் நலனே ஆவினின் முன்னுரிமை என ஆவன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக, ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுவது : ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர…