Indian Express Tamil
பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடுகள்; அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்
பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் முறையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பள்ளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், ஒரு சான்றிதழுக்கு ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களின் பணம் கட்சி நிதி என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நீதிமன்ற உத்தரவின் அ…