Nakkheeran
‘அடாவடி கேங்...’ - ‘டயங்கரம்’ படத்தின் டீசர் அப்டேட்!
சமூக வலைத்தளங்களின் மூலமாகப் பிரபலமான வி.ஜே.சித்து இயக்கி, நடித்து வரும் படம் 'டயங்கரம்'. சித்து இயக்குநராக அறிமுகம் ஆகும் இப்படத்தில், நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. முதலில் கடந்த ஜூனில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்பு ஜூலையில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியானது.…