Indian Express Tamil
தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை; விலை பட்டியலை வெளியிட்ட சங்கத் தலைவர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தாமல் இயக்க முடிவு செய்துள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயம் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கும் பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் பாண்டியன், பொதுமக்களுக்கு கட்டணச் சுமை இல்லாத தீபாவளியாக அமைய அனைத்துப் பேருந்து உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தினாலும் பேருந்து…