உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முரசு புயல் : வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கியத் தகவல்!

முரசு புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 4 மணி அளவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “முரசு தீவிர புயலானது சென்னை, மச்சிலிப்பட்டினம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 02) நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நாளை (நவம்பர் 03) அதிகாலை 04:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், நெல்லூர் மற்றும் நரசாபுரத்திற்கு இடையே ஓங்கோலுக்கு தெற்கே, மணிக்கு 100 முதல் 110 கி.மீ வே…