Nakkheeran
கோவை சூலூர் சிறுமி வழக்கு : தீர்ப்பு தேதி அறிவிப்பு!
கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், கடந்த மே மாதம் 21ஆம் தேதி (21.05.2026) மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இந்த சூழலில், அதற்கு மறுநாள் (22.05.2026) மாலை கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாக கிடந்துள்ளார். இத்தகைய சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 33 வயதான கார்த்…